latest news
திலோத்தமா கொடுத்த நம்பிக்கை… அஜித்துடன் ஷாலினி இணைய இவங்க தான் காரணமா?
Published on
குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஷாலினி. தொடர்ச்சியாக தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து புகழடைந்தார். பின்னர் மலையாளத்தில் அனியாத்தி பிராவு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அப்படத்தின் தமிழ் ரீமேக்கான காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் கோலிவுட்டுக்குள் வந்தார். அப்படத்தில் விஜயின் நாயகியாக நடித்து ஹிட்டடித்தார். அப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தாலும் ஷாலினிக்கு அதன் பின்னர் எந்த படத்தின் வாய்ப்பு வராமல் இருந்ததாம்.
இதனால் மீண்டும் மலையாள பக்கம் சென்ற ஷாலினி அங்கு நடித்து வந்து இருக்கிறார். இதை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. காதலுக்கு மரியாதை படத்தின் இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் மீண்டும் விஜயுடனே நடித்து இருப்பார். இதை தொடர்ந்து அவருக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
இயக்குனர் சரண் அமர்க்களம் படத்தில் நடிக்க முதலில் ஷாலினியை அணுகி பேசி இருக்கிறார். ஆனால் முதலில் கதையை கூட கேட்காமல் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறி அப்படத்தில் நடிக்க முடியாது என ஷாலினி சொல்லிவிட்டாராம். இருந்தும் அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க சரண் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறாராம்.
அதை தொடர்ந்து ஷாலினி, ஷாலினி ஒரு கட்டத்தில் இறங்கி வந்து அமர்க்களம் படத்தில் நடிக்க முடிவெடுக்க முக்கியமான காரணம் காதல் மன்னன் `திலோத்தமா’ கேரக்டர் தானாம். டைரக்டர் சரண் ஷாலினியிடம் பேசியபோது, அமர்க்களம் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டாராம். அந்தப் படம் பார்த்து நம்பிக்கை வந்தபிறகே அமர்க்களத்தில் அஜித்துடன் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு...
Karur: தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். மதியம் 12:3 மணிக்கு வருவார்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...