Connect with us

latest news

கமல்ஹாசனின் பாலிவுட் கனவை சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க… எல்லாத்துக்கும் காரணம் அந்த ஹிந்தி நடிகர் தான்..!

பாலிவுட்டில் கமலஹாசன் வளர முடியாமல் போனதற்கு பிரபல நடிகர் தான் காரணமாம்.

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் தமிழ் சினிமாவில் இவர் அதிகளவு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் சினிமாவை பாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சேரும்.

சமீபத்தில் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட கமல்ஹாசன் அரசியலில் களம் இறங்கி இருந்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனால் மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கமலஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கும் கமலஹாசன் ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் ஹிந்தியில் அறிமுகமான திரைப்படம் ஏக் துஜே கேலியே. இந்த திரைப்படம் வெளியாகி ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை பார்த்த ஹிந்தியில் டாப் நடிகர்களாக இருந்த பலருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி. என்ன இவர் முதல் திரைப்படத்திலேயே இப்படி ஸ்கோர் செய்கிறார் என்று. அதிலும் அமிதாப்பச்சனுக்கு மிகப்பெரிய ஷாக்கிங் ஆக இருந்ததாம்.

ஏனென்றால் அந்த சமயத்தில் அமிதாப்பச்சன் சூப்பர் ஹீரோவாக இருந்தார். அந்த காலத்தில் அமிதாப்பச்சனின் படங்களை விமர்சனம் செய்ய முடியாது. அவ்வளவு பெரிய நடிகராக இருந்தவர். அந்த சமயத்தில் வெளியான திரைப்படம் தான் ஏக் துஜே கேலியே. அப்போது அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தில் இருந்த பாதி பேர் கமல் ரசிகர் மன்றத்திற்கு தாவி விட்டார்கள்.

இதை பார்த்து அமிதாப்பச்சனுக்கு மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற்ற பிறகு இவரை நேரடியாக தாக்கினால் மாட்டிக் கொள்வோம் என்று எண்ணி வேறு மாதிரி பிளான் செய்தார். உடனே ரஜினிகாந்தை வைத்து அந்தா காந்த் என்ற படத்தை எடுத்தார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஜிராப்கான் என்ற திரைப்படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடிக்க அதில் கெஸ்ட் ரோலில் அமிதாபச்சன் நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் கமலஹாசன் நடிப்பை காட்டிலும் அமிதாபச்சன் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் கமல் நடிப்பில் வெளியான இரண்டு, மூன்று திரைப்படங்கள் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அப்போது கமலஹாசன் இனிமேல் ஹிந்தியில் நம்மை நடிக்க விட மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டார். உடனே பெரிய கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டார் கமலஹாசன். அதன் பிறகு ஒரு கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அழைத்தால் கூட கமலஹாசன் ஹிந்தி பக்கமே செல்லவில்லை. இதனை டாக்டர் காந்தராஜ் தனது பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.

author avatar
ramya suresh
Continue Reading

More in latest news

To Top