">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அதிர்ச்சி: பேட்மிட்டன் விளையாடியபோது நெஞ்சுவலி: இளம் நடிகர் திடீர் மரணம்
மலையாள சீரியல் நடிகர் சபரிநாத் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மலையாள தொலைக்காட்சிகளில் பிரபல சீரியல் நடிகர் சபரிநாத்(வயது 43). மின்னுக்கேட்டு, சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். கேரள மக்களுக்கு நன்குய் பரிச்சயமானவர் இவர்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மௌத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் சபரிநாத்துக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. உயிரிழந்த சபரி நாத்துக்கு மனைவி, மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவரது திடீர் மறைவு மலையாள சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.