எஸ் பி பிக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பும் தொலைக்காட்சி! ரசிகர்கள் மகிழ்ச்சி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தை கௌரவிக்கும் விதமாக நாளை ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது கலர்ஸ் தொலைக்காட்சி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தை கௌரவிக்கும் விதமாக நாளை ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது கலர்ஸ் தொலைக்காட்சி.
தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவரின் உடல்நிலை இப்போதுதான் மெல்ல குணமாகி வருகிறது.
இந்நிலையில் அவரை கௌரவிக்கும் பொருட்டு கலர்ஸ் தொலைக்காட்சி நாளை மதியம் 12 மணிக்கு ஆயிரம் நிலவே வா என்ற பெயரில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. இதுவரை இந்தியாவின் 16 மொழிகளில் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் எஸ் பி பி என்பது குறிப்பிடத்தக்கது.