Connect with us

Cinema News

குரங்குனு சொன்னதுக்கு இப்படி சொல்றதா? நயன்தாராவை போட்டு வெளுக்கும் பிஸ்மி

பஞ்சாயத்து ஓய்ந்தபாடில்லை:

நாளுக்கு நாள் வலைப்பேச்சுக்கும் நயன் தாராவுக்குமான பஞ்சாயத்து வலுபெற்று வருகிறது. இப்போது வலைப்பேச்சு பிஸ்மி நயன் தாராவை குறித்து சில தகவல்களை கூறியிருக்கிறார். அவருக்கு ஒரு வித மன நோய் என்றும் பேசியிருக்கிறார். இதோ அவர் கூறிய செய்தி: வலைப்பேச்சுனு கிடையாது. எந்த ஒரு youtube சேனலாக இருந்தாலும் லைம் லைட்டில் இருக்கிற நம்பர் ஒன்னாக இருக்கும் மார்க்கெட்டில் இருக்கும் ஆர்டிஸ்ட் குறித்து நீங்கள் செய்தி வெளியிட்டால்தான் அந்த வீடியோ பல லட்சக்கணக்கில் போகும்.

ஆனால் ஒரு மார்க்கெட்டில் இழந்த ஒரு முன்னாள் நடிகை குறித்து நீங்கள் பேசினீங்கன்னா அந்த அளவுக்கு வியூவ்யூஸ் போகாது என நயன்தாராவை பற்றி பிஸ்மி கூறி இருக்கிறார்.

அதாவது நயன்தாராவை பொருத்தவரைக்கும் ஒரு மார்க்கெட் இழந்த முன்னாள் நடிகை தான். ஒரு தோல்வி பட நடிகை தான்.அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நானும் ரவுடிதான் படத்திலிருந்து பார்த்தால் அவர் எத்தனை வெற்றி படங்களில் நடித்தார் என எண்ணி பார்த்து விடலாம். நயன்தாராவை முன்னிலைப்படுத்தி ஹீரோயின் சப்ஜெக்டில் நடித்த எத்தனை படங்கள் ஓடி இருக்கிறது?

நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள்:

அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் நஷ்டம் அடைந்தது தான் மிச்சம். ஆனால் நயன்தாரா தான் ஒரு கனவிலும் கற்பனை உலகத்திலும் இருக்கிறார். தான் என்னவோ ஒரு பெரிய தேவதை போலவும் உலகமே கொண்டாடுகிற தேவதையாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு வித அதீத கற்பனை. அந்த உலகத்தில் தான் நயன்தாரா இருக்கிறார். இது ஒரு மன நோய் என்பது அவருக்கு தெரியவில்லை.

அவர் குரங்குனு சொல்லிட்டாங்க அப்படிங்கிறதுக்காக இதை சொல்லவில்லை. அவருக்கு பதிலடியாக அவமானப்படுத்த வேண்டும் இழிவுபடுத்த வேண்டும், மலின படுத்த வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. இதற்கு ஒரு உதாரணமாக நான் சொல்கிறேன். நயன்தாரா சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் அவருடைய திருமணம் குறித்த ஒரு டாக்குமென்டரியை வெளியிட்டார்.

டாக்குமெண்டிரியின் நிலைமை:

சொல்லப்போனால் அந்த டாக்குமென்டரி எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள். அந்த டாக்குமென்டரி வருகிறது என ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே அறிவித்தாலும் கூட அந்த டாக்குமென்டரிக்கு ஒரு பெரிய வரவேற்பு இல்லை. அது தெரிந்து கொண்டு தான் அதை எப்படியாவது பப்ளிசிட்டி ஆக வேண்டும் என நினைத்து அந்த டாக்குமென்டரி வெளியாகும் முதல் நாள் தனுஷுக்கு எதிராக அந்த ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா.

ஆனால் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை .நீங்கள் நினைக்கிற மாதிரி ஒரு பெரிய முன்னணி நடிகை என்று நீங்கள் இருந்திருந்தால் நீங்கள் நடித்த எந்த படமும் பெரிய வெற்றி படமாக ஓடவில்லையே. அதனாலதான் சொல்கிறேன் அவர் மார்க்கெட் இழந்த முன்னாள் நடிகை என என்று பிஸ்மி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top