1. Home
  2. Latest News

நான் வெங்கட்பிரபு தம்பி இல்ல.. அதனால் கோட் படத்துல வாய்ப்பு இல்ல!. புலம்பும் நடிகர்...

நான் வெங்கட்பிரபு தம்பி இல்ல.. அதனால் கோட் படத்துல வாய்ப்பு இல்ல!. புலம்பும் நடிகர்...

Goat Movie: சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த கங்கை அமரனின் மூத்த மகன் இவர். நண்பர்களை வைத்துக்கொண்டு ஜாலியாக படமெடுப்பது இவரின் ஸ்டைல்.

அப்படி அவர் எடுத்த சென்னை 28 சூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இதில், அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து அஜித்தை ஒரு மாஸ் நடிகராக மாற்றியது. அதன்பின் வெங்கட்பிரபு இயக்கிய படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை.


அந்த நிலையில்தான் வெங்கட்பிரபு சொன்ன கதை பிடித்துபோய் அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார் விஜய். அப்படி உருவான திரைப்படம்தான் கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க அவருடன் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் விஜயை இளமையாக காட்ட ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் ஏ.ஐ.தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால், அது சிறப்பாக வரவில்லை. அதோபோல், துவக்க காட்சியில் ஏஐ மூலம் விஜயகாந்தையும் கொண்டு வந்தார்கள். அது பார்ப்பதற்கு விஜயகாந்த் போலவே இல்லை.

கோட் படம் வட மாநிலங்களிலும், கேரளாவிலும் வரவேற்பை பெறவில்லை. எனவே, இப்படம் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில், இந்த படத்தில் தனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி வெங்கட்பிரபு ஏமாற்றிவிட்டதாக ஒரு காமெடி நடிகர் புலம்பி இருக்கிறார்.

நான் வெங்கட்பிரபு தம்பி இல்ல.. அதனால் கோட் படத்துல வாய்ப்பு இல்ல!. புலம்பும் நடிகர்...

சதீஷ்தான் அந்த காமெடி நடிகர். ‘கோட் படத்தில் நீங்க நடிக்கிறீங்கன்னு வெங்கட்பிரபு சொன்னார். ஆனால், அதன்பின் என்னை கூப்பிடவே இல்லை. என்னை ஏமாத்திட்டார். அடுத்த ஜென்மத்தில் அவருக்கு தம்பியா பொறக்கணும். அப்பதான் அவர் படத்துல நடிக்க முடியும்’ என நக்கலடித்திருக்கிறார். இதே சதீஷ் விஜயுடன் கத்தி, பைரவா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.



கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.