">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பாடகி கனிகா கபூருக்கு 5வது சோதனை – முடிவு என்ன தெரியுமா?
பாலிவுட்டின் பின்னணி பாடகியான கனிகா கபூருக்கு மருத்துவமனையில் ஐந்தாவது முறையாக எடுக்கப்பட்ட சோதனையில் பாஸிட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது.
பாலிவுட்டின் பிரபல பின்னணிப் பாடகியான கனிகா கபூர் மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பினார். அவரை விமான நிலைய அதிகாரிகள் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருக்க உத்தரவிட்ட நிலையில் அதை மதிக்காமல் லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டார்.
அந்த பார்ட்டியில் நூற்றுக் கணக்கான பேர் கலந்துகொண்ட நிலையில் கனிகாவுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கும் மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல் அவர் அடம்பிடிப்பய்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவமனைகளில் கொரொனா நோயாளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா வைரஸ் இருக்கிறதா எனப் பார்ப்பது வழக்கம். அந்த வழக்கப்படி கனிகா கபூருக்கு தொடர்ந்து 5 ஆவது முறையாகவும் கொரோனா பாஸிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரது உடல் சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.