இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் விக்ரனன் அஷோக் இயக்கத்தில் கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கவினால் ஏற்பட்ட சிக்கல்களை இயக்குனர் சாமர்த்தியமாக சரி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் கவின், சரவணன் மீனாட்சி சீரியல் வேட்டையன் என்ற கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கிங்ஸ் ஆப் டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். அதை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.
நடிகர் கவின் நட்புனா என்னனு தெரியுமா படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடித்தார். அதைத்தொடர்ந்து லிஃப்ட், டாடா, ஸ்டார் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த கவின் கடைசியாக நடித்த ப்ளடி பக்கர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ஓடாத நிலையில், அப்செட் ஆனார்.புதிய இயக்குனர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டுகின்ற கவின் அவர்களுக்கு புதுமையான யோசனைகள் இருக்கும் என்று நம்புகிறார்.
இந்நிலையில், வெற்றிமாறன் தயாரிப்பில் விக்ரனன் அஷோக் இயக்கத்தில் ஆண்ட்ரியாவுடன் மாஸ்க் படத்தில் நடித்து வரும் கவின் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து படப்பிடிப்பில் தலையிட்டு வருகிறாராம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தொல்லையை தாங்க முடியாமல் இயக்குனர் வெற்றிமாறன் காதில் கவின் செய்யும் ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிகளை இயக்குனர் புலம்பித் தீர்த்து விட்டாராம். அதனால், தற்போது இரண்டு நாட்களாக வெற்றிமாறன் படப்பிடிப்பு தளத்திற்கே நேரில் வந்து உட்கார்ந்திருப்பதால் கவின் அமைதியாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது படப்பிடிப்பு சுமூகமாக செல்கிறதாம்.
முன்னணி நடிகர்களை போல கவினும் இயக்குனர்கள் இயக்கத்தில் தலையிட்டு வந்தால், அவரது படங்களும் தொடர்ந்து சொதப்பும் என சினிமா உலகில் பேசிக் கொள்கின்றனர். கவின் நடிப்பில் அடுத்து வெளியாகும் கிஸ் படம் எந்தவொரு எதிர்பார்ப்பும் உள்ளது படத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…