1. Home
  2. Latest News

கமலுக்கு வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி - வேற லெவல் கம்போ!

கமலுக்கு வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி - வேற லெவல் கம்போ!

கமல் 232 படத்தில் வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி


கமலுக்கு வில்லன் ஆகிறார் விஜய் சேதுபதி - வேற லெவல் கம்போ!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிக்காக எழுதிய கதையை அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து கமலை வைத்து இயக்க உள்ளார். அதற்கான முதல் போஸ்டர் நேற்று இணையத்தில் வெளியானது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதில் கமலின் உருவம் துப்பாக்கிகளால் உருவாக்கப்பட்டு இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் ஆங்கிலத்தில் ‘once upon a time there lived a ghost’ என எழுதப்பட்டு இருந்தது.  இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்தப் படத்துக்கு ‘குரு’ என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் கூறுகிறது. இதே டைட்டிலில் 1980-ம் ஆண்டு  கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் "குரு" என்ற படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் வில்லன் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்ப்போது கமலை மிரட்ட வரும் விஜய் சேதுபதியை திரையில் காண ஆர்வம் அதிகரித்துவிட்டது. படக்குழு தரப்பில் விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.