Connect with us

Cinema News

சூர்யா, கமலுக்கு விபூதி அடித்தது போல விஜய்க்கும் அடிக்க பார்க்கிறாங்க!.. ஜன நாயகன் தப்புவாரா?..

கடந்த வாரம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தை பற்றி பலரும் பல விதமாக விமர்சித்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் விமர்சனம் செய்தவர்களையே விமர்சித்தும் ஜனநாயன் படத்தை பற்றியும் பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்தணன் தனது வீடியோவில், கமல்ஹாசனும் பல கனவுகளுடன் தனது அரசியல் கட்சியை தொடங்கியிருந்தாலும் அவர் நினைத்த அளவிற்கு அவரால் கட்சியை உயர்த்த முடியவில்லை, அதனால் அவர் திமுகவுடன் இணைந்து ராஜ்ய சபா எம்பியாக பதவி ஏற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் திமுகவில் இணைந்தது பலரையும் கோபப்படுத்தியுள்ளது. அதனால் பலரும் தக் லைஃப் படத்தை விமர்ச்சிக்கிறேன் என்று முழுக்க முழுக்க நெகட்டிவாக விமர்சித்து வருகின்றனர்.

தக் லைஃப் படத்தில் பேசிய வசனங்கள் எல்லாம் மணிரத்னம் படம் தானா என யோசிக்க வைத்ததாகவும், இப்படம் கமலின் தரத்தை குறைத்துவிடுமா என்று கேட்டால்? இல்லை, இந்த ஒரு படம் தோல்வி அடைந்ததால் கமலின் தரம் குறைந்துவிடாது. தக் லைஃப் படம் ஃப்ளாப் ஆகியிருந்தாலும் திரையரங்குகளை தவிர மற்றவைக்கு இந்த படம் நல்ல விலைக்கு விலைப்போயிருக்கு. அதனால் அவர்களுக்கு இந்த படம் நஷ்டம் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய நாயகன் படத்தை ஃபிலிம் ரோலிலேயே ஆறு மணி நேரம் எடுத்து வைத்து எடிட் செய்துள்ள அவர் தக் லைஃப் படத்தில் எந்த அளவிற்கு அலட்சியமாக இருந்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது.

சூர்யாவின் படம் வரும் போதேல்லாம் படத்தை ஓடவிடாமல் செய்ய இருக்கும் ஐடி விங்ஸ் போலவே கமலுக்கும் உருவாகிவிட்டார்கள். ஆனால் படம் நல்லா இருந்தா யாராலும் எதுவும் செய்ய முடியாது. அதே போல் விஜய்யின் ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் ஓட விட மாட்டோம் என வேல் முருகன் கூறியுள்ள நிலையில் இப்படத்தையும் ஓடவிடாமல் செய்ய பலரும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதெல்லாம் விஜய்யின் படத்தை வீழ்த்துவதற்கு வாய்ப்பே இல்லை. இப்படி அவரை சீண்டுவது தேன் கூட்டின் மேல் கல் எறிவது போல . மேலும், விஜய் படத்தின் மீது கை வைத்தால் பெரும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

சூர்யாவின் ரெட்ரோ, கமல்ஹாசனின் தக் லைஃப் படங்களுக்கு ஏற்பட்டதை போலவே ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆன உடனே அந்த படத்துக்கு எதிராகவும் நெகட்டிவ் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகம் பரவும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top