1. Home
  2. Latest News

விஜய் போட்ட டிவிட்டு கூட ஹிட்டுதான்!.. இந்திய அளவில் சாதனை செய்த செல்பி....

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் பரவல் மாஸ்டர் படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்றே தெரியாத சூழலில் சிக்கியுள்ளது. 

இதனால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால், திரையரங்குகள் திறப்புக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒருபக்கம், சமூகவலைதளங்களில்  விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

விஜய் போட்ட டிவிட்டு கூட ஹிட்டுதான்!.. இந்திய அளவில் சாதனை செய்த செல்பி....

கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்து திரையரங்குகள் எப்போதும் திறக்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வருவதால் மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால், தயாரிப்பு தரப்பு இதை மறுத்துள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தபோது தன்னை காண ரசிகர்ள் கூறியபோது, ஒரு வேனின் மீது ஏறி நடிகர் விஜய் எடுத்த செல்பி புகைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளடு. இந்திய நடிகர்கள் அதிக ரீடிவிட் செய்த டிவிட்டர் பதிவாக அது மாறியுள்ளது. இதுவரை ஏறக்குறைய 1.5 லட்சம் பேர் அந்த டிவிட்டை ரீடிவிட் செய்துள்ளனர்.

ஏற்கனவே, யுடியூப்பில் குட்டி ஸ்டோரி பாடல் வரி வீடியோ 71 மில்லியன் பார்வைகளையும்,  வாத்தி கம்மிங் பாடல் வரி வீடியோ 18 மில்லியன்  பார்வைகளையும், பொளக்கட்டும் பரபர பாடல் வரி வீடியோ 6.5 மில்லியன்  பார்வைகளையும், அந்த கண்ண பாத்தாக்க பாடல் 11 மில்லியின் பார்வைகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.