Categories: latest news

தேவையில்லாத ரிஸ்க் எடுக்கும் விஜய்சேதுபதி.. ஹீரோவா மாஸ் காட்டும் போது இது தேவையா?

வில்லன் விஜய்சேதுபதி:

மாஸ்டர், விக்ரம், ஜவான் என அடுத்தடுத்து வில்லனாகவே நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு மகாராஜா திரைப்படம் ஹீரோவாக ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்தது. வில்லனாகவே நடித்து விட்டோமே. மீண்டும் ஹீரோவாக மக்கள் தன்னை ஏற்பார்களா என்ற எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நடிப்பது நம் தொழில். அது எந்த கதாபாத்திரமானால் என்ன? துணிந்து இறங்குவோம் என மகாராஜா படத்தில் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் துணிந்து நடித்தார் விஜய் சேதுபதி.

ஆனால் அந்த படம் இந்தியா மட்டுமல்ல சீனா வரைக்கும் இவரின் நடிப்புத் திறமையை கொண்டு போய் சேர்த்தது. ரஜினி விஜய் இவர்களின் படங்கள் தான் சீனாவில் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படமும் அங்கு ரிலீஸ் ஆகி அங்குள்ள மக்கள் விஜய் சேதுபதியையும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக நடிப்பாரா அல்லது ஹீரோவாக நடிப்பாரா என்ற ஒரு கேள்வி இருந்து வந்தது.

விடுதலை 2:

ஆனால் ஏற்கனவே அவர் நடித்த விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளியாகி மீண்டும் அவரை மக்கள் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி இருக்கின்றனர் .விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அனைத்து பிரபலங்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதனால் இனிமேல் அவர் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார் என ஓரளவு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்திலும் ட்ரெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி வருகிறார். இப்படி மிகவும் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

மீண்டும் அதே இயக்குனர்:

ஆரம்ப காலங்களில் அவருக்கு மிகவும் கை கொடுத்த படமாக அமைந்தது சுந்தர பாண்டியன் திரைப்படம். அந்தப் படத்தில் துணை நடிகராக நடித்திருந்தாலும் அவருடைய கதாபாத்திரம் மக்களை பெருமளவு ஈர்த்தது. அந்த படத்தை இயக்கியவர் எஸ் ஆர் பிரபாகரன். அதே இயக்கனருடன் மீண்டும் விஜய் சேதுபதி ஒரு புதிய படத்தில் இணையப் போகிறார் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது .

இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த படத்தை தயாரிக்கப் போவது செவன் ஜி மூவிஸ் என்ற நிறுவனமாம். ஏற்கனவே இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சப்தம் என்ற திரைப்படம் இன்னும் ரிலீசாகாமல் பல நாட்கள் கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதியின் படமும் போய் சேருமா அல்லது வெளியாகுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்