">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சர்வாதிகாரிக்கு எதுக்கு பாதுகாப்பு: வைரமுத்துவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சமீபத்தில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் துணைநிலை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது. இருவருக்கும் இனி மாநில போலீசார் பாதுகாப்பை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் துணைநிலை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது. இருவருக்கும் இனி மாநில போலீசார் பாதுகாப்பை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் முக ஸ்டாலின் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களின் பாதுகாப்பினை ரத்து செய்தது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில், ‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த உச்சகட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது. ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவின் இந்த டுவிட்டுக்கு பல நெட்டிசன்கள் கலாய்த்து பதிலடி டுவீட் பதிவு செய்து வருகின்றனர். முக ஸ்டாலின் தான் சர்வாதிகாரி ஆயிற்றே அவருக்கு எதுக்கு பாதுகாப்பு என்றும், சமூகத்துக்கு போராடும் போராளிக்கு சமூகமே பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று அறைகூவல் விடுத்துவிட்டு இப்ப காவல்துறை பாதுகாப்பை கேட்பதால் உங்களுக்கு சமூகத்தின் மீது நம்பிக்கையில்லையா ? என்றும், ஸ்டாலின் எந்த சமூகத்திற்காக போராடினார் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த உச்சகட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது.
ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன்.— வைரமுத்து (@vairamuthu) January 10, 2020