Categories: latest news

மீரா மிதுனை திட்டுபவர்கள் யார் ? அதிர்ச்சியளிக்கும் செய்தி!

நடிகர் சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது எனக் கூறி மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் நடிகையும் மாடலுமான மீராமிதுன்.

மீரா மிதுன் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி சமூகவலைதளத்தில் தன்னைப் பற்றி பேச்சு இருக்குமாறு பார்த்துக்கொள்வார். அந்த வகையில் இப்போது சூர்யாவுக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது எனக் கூறியும் தானா சேந்த கூட்டம் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியையையும் 10 முறைக்கு மேல் நடிப்பார் எனக் கூறியதும் சர்ச்சைகளைக் கிளப்பியது.

இதையடுத்து கடுப்பான சூர்யா ரசிகர்கள் அவருக்கு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கண்டனங்கள் எல்லாம் எல்லை மீறி அவரை ஆபாசமாக திட்டும் அளவுக்கு சென்றது. இதையடுத்து சூர்யா ரசிகர்கள் ஆபாசமான செயல் என்று மீரா தனக்கான ஆதரவை தேடிக் கொண்டு வருகிறார். ஆனால் அவ்வாறு ஆபாசமாகப் பேசியவர்களில் பெரும்பாலோனோர் சூர்யா ரசிகர்கள் இல்லை என்றும் சமீபகாலமாக சூர்யாவைக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் சொல்லப்படுகிறது. சூர்யாவை அவதூறு செய்யும் வகையில் அவர்கள் இந்த செயலில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram