முந்தானை முடிச்சு ரீமேக்கில் இவரா? ஊர்வசி நடிப்பை ஈடுசெய்வாரா?

முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிகை ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிகை ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த இந்த படம் ஊர்வசிக்கும் மிகப்பெரிய சினிமா வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது.
இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தை இப்போது ரீமேக் செய்து சசிக்குமார் நடிக்க உள்ளார். இரண்டாம் பாகத்துக்கான கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். மேலும் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்க ஊர்வசி கேரக்டரில் யார் என்பது இப்போது தெரியவந்துள்ளது. சமீப காலமாக தன் நடிப்புத் திறனால் அசத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஊரவசி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் அவர் ஊர்வசியின் நடிப்பை ஈடு செய்வாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.