தமிழ்ப்பட உலகில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் சமகால போட்டியாளர்கள் தான். ஆனால் நேரெதிர் துருவங்கள். ஒருவர் கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் ஆல் ரவுண்டர். மற்றவர் நடிப்பு நடிப்பு நடிப்பு தான். அவர் உடல் மொழிகளே இதைச் சொல்லும். கலைப்படங்களில் ஆர்வம் காட்டுவார் என்றாலும் அவர் நடித்தாலே அது கலைப்படம் தான். பார்த்து ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்.
எம்ஜிஆர், சிவாஜி இருவரையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்குள் பல வேற்றுமைகள் வரும். அதில் முதலாவது கேள்வி. எம்ஜிஆர் ஏன் சிவாஜியைப் போல புராணக் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பது தான். இதே கேள்வியை நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.
சிவாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்தார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பட்டை பட்டையாக விபூதியுடன் தான் அவர் காட்சி தருவார். ஆனால் எம்ஜிஆர் அப்படி அல்ல. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர். அதோட முக்கியமான கொள்கையே கடவுள் மறுப்பு தான்.
அப்படி இருக்க புராணக் கதாபாத்திரங்களில் எம்ஜிஆர் நடிச்சா அவங்க கட்சிக்காரர்களாலேயே எம்ஜிஆர் விமர்சிக்கப்பட மாட்டாரா? அதன் காரணமாகத் தான் புராணக் கதாபாத்திரங்களில் நடிப்பதை அவர் தவிர்த்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிவாஜியோ திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை என பல புராண காலப்படங்களில் நடித்து அசத்தினார். தேவர் பிலிம்ஸின் தனிப்பிறவி படத்தில் ஒரு காட்சியில் முருகக் கடவுளின் தோற்றத்தில் எம்ஜிஆர் நடித்து அசத்தியிருப்பார். எம்ஜிஆருக்கு முருகன் வேடம் அசத்தலாக இருக்கும்.
சிவாஜி எத்தனை படங்கள் நடித்தாலும் அதில் தனித்து நிற்பது இந்த புராண காலப் படங்கள் தான். பட்டி தொட்டி எங்கும் அவரைக் கரை சேர்த்தது இந்தப் படங்கள் தான். சிவாஜியை சிவன் வேடத்தில் பார்த்தால் சிவன் கோவிலில் போய் சிலையைப் பார்க்க தேவையில்லை.
Ajith: அமராவதி…
Rashmika Mandana:…
Ajith Vijay:…
Seeman: இயக்குனர்…
வெற்றிமாறன் இயக்கத்தில்…