">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஏன் இப்படி பண்றீங்க! போலீசாருடன் சேர்ந்து களம் இறங்கிய சசிக்குமார் – வைரலாகும் புகைப்படங்கள்
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 14378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் உயிரிழந்து விட்டனர்.
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், ஒரு வாகனத்தில் ஒருவர் மட்டுமே வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகளை போலீசார் வகுத்துள்ளனர். ஆனாலும், பலரும் விதிமுறைகளை மீறி சாலைகளில் வாகனங்களில் வருவதும், அவர்களை போலீசார் எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், மதுரையில் நடிகர் சசிக்குமார் காவல் அதிகாரிகளுடன் இனைந்து சாலைப்போக்குவரத்தில் ஒருநாள் முழுக்க தன்னார்வ தொண்டராக பணியாற்றினார். இருசக்கர வாகங்களில் வருபவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாக நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
கொரோனா தடுப்புக்காக மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றி இருக்கிறார் சசிகுமார். “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் சசிகுமார். உளப்பூர்வமான பணி @SasikumarDir pic.twitter.com/mKUyKLUF9U
— இரா.சரவணன் (@erasaravanan) April 18, 2020