Categories: Cinema News latest news

ஆந்திராவில் என்னாச்சு தெரியும்ல? அதான் விஜய் கம்முனு இருக்காரு.. கம்பி கட்டுற கதை சொன்ன பாலாஜி

விஜயின் அரசியல் வேகம்:

விஜயின் அரசியல் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. பிஜேபிக்கு எப்படி ஒரு அண்ணாமலையோ அதை போல விஜய் தாடி பாலாஜி. சமீபகாலமாக விஜயின் செயல்பாடுகள் குறித்து தாடி பாலாஜி பல பேட்டிகளில் கூறி வருகிறார்கள். ஜனவர் 27 ஆம் தேதி தமிழ் நாடு முழுக்க விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக தாடி பாலாஜி கூறியிருந்தார். அது மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே பல விமர்சனங்கள் அவர் முன் வைக்கப்பட்டது. பேசுவாரா மாட்டாரா? அரசியலில் நீடிப்பாரா இல்லையா என்றெல்லாம் பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் அவை எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய முதல் மாநாட்டிலேயே தன் முதல் அரசியல் எதிரி யார் என்பதை இந்த உலகிற்கு காட்டினார்.

லைம் லைட்டில் ஜொலிக்கும் விஜய்:

மாநாட்டில் அவர் பேசிய பேச்சு ஒன்றிய அரசு வரை ஒலித்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இதற்கு பல்வேறு கருத்துக்களை சொல்ல ஆரம்பித்தனர். அதிலிருந்தே விஜய் தன்னை அரசியல் சார்பாக லைம் லைட்டில் வைக்க ஆரம்பித்தார். சினிமாவில் பெரிய ஆளுமையாக இருக்கலாம். ஆனால் அரசியலிலும் ஆக வேண்டும் என்றால் கொஞ்சம் நாள்கள் ஆகும். அதற்கான வேலைகளை இப்போதிலிருந்தே விஜய் செய்ய ஆரம்பித்தார்.

மாநாடு முடிந்த பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் பொதுவிழா என்றால் அம்பேத்கர் புத்தக விழாதான். அந்த விழாவிலும் மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தார். இதனால் விஜயின் அரசியல் செயல்பாடுகளை பத்திரிக்கைகளும் நோட்டமிட ஆரம்பித்தனர். இதற்கிடையில் பெரியார் நினைவு நாளில் தன்னுடைய வீட்டிலேயே அவருடைய உருவ படத்திற்கு மாலையிடுவது, வேலு நாச்சியார் நினைவு நாளுக்கும் வீட்டிலேயே மரியாதை செலுத்துவது என வொர்க் ஃபிரம் ஹோமா பார்க்கிறாரா விஜய் என கிண்டலடித்து வந்தனர்.

இதான் காரணமா?

ஆனால் ஏன் விஜய் வெளியே வரவில்லை என்பதற்கான காரணத்தை தாடி பாலாஜி கூறியிருக்கிறார். ஆந்திராவில் என்ன நடக்கிறது என்பது தெரியும்ல? அல்லு அர்ஜூன் புஷ்பா படத்தால் அவருடைய வாழ்க்கை தினமும் புஷ்ஷுனு போய்விட்டது. அவர் வெளியே வந்த ஒரு காரணத்தால் திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதை போல் விஜயும் வெளியே வந்தால் 100% கூட்டம் வரும். 5 மடங்கு கூட்டம் வரும். அதை தடுக்கத்தான் வரவில்லை. ஆனால் எல்லா கேள்விகளுக்கும் ஒரு நாள் தக்க பதிலடி கொடுப்பார் தலைவர் என தாடி பாலாஜி கூறியிருக்கிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்