Connect with us

latest news

அஜித்துக்கு பாராட்டுவிழா.. யோகிபாபு சொன்னதன் பின்னணி! எல்லாத்துலயும் ஒரு அரசியல்தான்

யோகிபாபுவின் காமெடி: தமிழ் சினிமாவில் காமெடியில் இப்போது மிகவும் பீக்கில் இருப்பவர் நடிகர் யோகி பாபு. ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த இவர் தொடர்ந்து காமெடியாக நடித்து மக்கள் மத்தியில் ஒரு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறி இருக்கிறார். இவருடைய எதார்த்தமான காமெடி ஆரம்பத்தில் மக்களை கவர்ந்தது என்றாலும் சமீபகாலமாக இவருடைய காமெடியில் எதிர்பார்த்த அளவு நகைச்சுவை இல்லை என்பது தான் பெருவாரியான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அஜித் ரசிகர்களின் கோவம்: இருந்தாலும் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமல்லாமல் சின்ன பட்ஜெட் படங்கள் என எந்த ஒரு படத்தையும் விடாமல் எல்லா படத்திற்கும் கால்ஷீட் கொடுத்து ஒரு பிசியான நடிகராக மாறி இருக்கிறார் யோகி பாபு. இவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அஜித்துக்கு பாராட்டு விழா வைக்க வேண்டும் என ஒரு கருத்தை தெரிவித்தார். அது இணையதளத்தில் தீயாய் பரவியது.

பூதாகரமாக மாறிய சம்பவம்: அதற்கு காரணம் ஏற்கனவே அஜித்திற்கும் யோகி பாபுவுக்கும் இடையில் ஏதோ ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாகவும் அஜித் ரசிகர்கள் யோகி பாபுவை சோசியல் மீடியாவில் வச்சு செய்தனர். அதாவது ஒரு படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை யோகி பாபு தொட முற்படும்போது அதற்கு அஜித் டோன்ட் டச் என்று சொன்னதாகவும் இந்த தகவலை யோகி பாபு பிஸ்மியிடம் சொன்னதாகவும் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது அந்த நேரத்தில் பெரிய பூதாகரமாக மாறியது. உடனே அஜித் ரசிகர்கள் யோகி பாபுவை திட்டி கமெண்டில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர்..

நானும் அஜித்தும் க்ளோஸ்: ஆனால் இந்த சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து திடீரென அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை யோகிபாபு இணையத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அது நானும் அஜித்தும் எவ்ளோ க்ளோஸ் தெரியுமா என்பதை காட்டுவதற்கு கூட அந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கலாம் என பிஸ்மி அவருடைய கருத்தை தெரிவித்திருந்தார். ஏன் இப்போது அவர் அஜித்துக்கு பாராட்டு விழா வைக்க வேண்டும் என்று சொன்னது கூட அஜித் ரசிகர்களுக்கு தன் மீது இருக்கும் கோவத்தை குறைப்பதற்காகக் கூட சொல்லியிருக்கலாம் என பிஸ்மி தெரிவித்திருந்தார்.

அப்படியே அஜித்துக்கு பாராட்டு விழா வைத்தாலும் அஜித் வந்து விடுவாரா அப்படி வரவில்லை என்றாலும் அஜித்தை அழைத்து வரும் பொறுப்பை யோகிபாபு ஏற்றுக் கொள்வாரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் பிஸ்மி.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top