saira banu
சினிமா செலிப்ரட்டிகளுக்கு வழக்கறிஞராக இருக்கும் வந்தனா ஷா ஒரு பிரபல ஜோடியின் திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையை குறித்து பேசி இருக்கின்றார்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு தனது வழக்கறிஞரான வந்தனா மூலமாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார். திருமணமாகி 29 ஆண்டுகள் கழித்து இருவரும் தங்களது பிரிவை அறிவித்திருந்தார்கள். இந்த பிரிவானது சமூக வலைதள பக்கங்களில் ஏ ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க: திருப்பதியில் சந்தானம்.. லட்டு கொடுக்கப்போன ரசிகர்! சந்தானத்தின் ரியாக்ஷனை பாருங்க
சினிமா பிரபலங்களின் விவாகரத்து வழக்குகளை பெரும்பாலும் டீல் செய்து வருபவர் வழக்கறிஞர் வந்தனா ஷா. இவர் தற்போது சாய்ரா பானுவின் வழக்கறிஞராக இருந்து விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் இவர் பாட்காஸ்ட்டில் ஒன்றில் சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து பேசி இருந்தார்.
சினிமாவில் இருக்கும் ஜோடிகள் பெரும்பாலும் தங்களது வாழ்க்கை போரடிப்பதால் விவாகரத்து செய்கிறார்கள். மேலும் சில விவாகரத்து கள்ளதொடர்பு காரணமாக நடைபெறுகின்றது என்று பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் தென்னிந்தியாவில் ஒரு வழக்கு இருக்கின்றது. அந்த வழக்கில் எல்லா விஷயங்களையும் அந்த நடிகையின் மாமனார் தான் பார்த்துக் கொடுக்கின்றார்.
aishwariya
மருமகளான அந்த நடிகை அவ்வளவு சந்தோஷமாக இல்லை. கணவர் மனைவியிடம் புலியாகவும், அப்பா முன்பு பூனை மாதிரி பதுங்கி விடுகின்றார். காரணம் அப்பாவிடம் பத்தாயிரம் கோடிக்கு சொத்து இருக்கின்றது. இதனால் அந்த நடிகையின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த திருமண வாழ்க்கை எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கும் என்பது தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
இதை கேட்ட ரசிகர்கள் பலரும் இவர் சினிமாவில் அப்படி யாரை குறிப்பிடுகின்றார் என்று ஆராய தொடங்கி இருக்கிறார்கள். இவர் கூறுவதை எல்லாம் வைத்து பார்க்கும்போது அபிஷேக் பச்சனையும் ஐஸ்வர்யா ராயையும் சொல்வது போல் இருக்கின்றது. அப்பா அமிதாபச்சன் சொல்படிதான் நடிகர் அபிஷேக் பச்சன் நடந்து கொள்வார்.
இதையும் படிங்க: திருமண விழாவில் நயன்!.. அட நம்ம தனுஷும் போயிருக்காரே!.. அதுவும் இவ்வளவு பக்கத்துலயா!..
அது மட்டுமில்லாமல் சமீப நாட்களாக நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப் போவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த தம்பதியினரை தான் வந்தனா கூறுகிறார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் அவர் தென்னிந்தியா என்று குறிப்பிடுவதால் யாராக இருக்கும் என்று ஆராய்ந்து வருகிறார்கள்.
ஒரு வேலை பொதுவாக சொன்னால் கண்டுபிடித்து விடுவோமோ? என்று இப்படி ரசிகர்களை குழப்பி இருக்கிறாரா வந்தனா? என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். எது எப்படியோ தற்போது சினிமா வட்டாரங்களில் விவாகரத்து என்பது மிகவும் எளிதாக அறிவிக்கப்படுகின்றது. அவர்களை பின்பற்றும் ரசிகர்களுக்கு இது தவறான எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…