×

அஜீத்தை பற்றி புகழ்ந்து தள்ளிய முன்னணி நடிகை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர், தனது கடின உழைப்பினால் அவர் இந்த நிலையை அடைந்தார். தமிழ் சினிமாவில் அதிகபடியான ரசிகர்களை கொண்டுள்ள அஜித், அவரின் திரைப்படம் வெளியானலே திரையரங்கம் திருவிழா போல் காட்சியளிக்கும்.
 
மேலும், இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் ரீதியாகவும் மிக பெரிய பெற்றியடைந்தது.

தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், நேர்கொண்ட பார்வைக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் பெரிய ஏதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகையான ரேவதி நடிகர் அஜித் குறித்து ஒரு பேட்டியில் மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

அதில் “எனக்கு அஜித்தை முன்னரே தெரியும் பாசமலர்கள், திரைப்படத்தில் அவருடன் நடித்துள்ளேன்.மேலும், அவரை சிறு வயதிலிருந்தே பார்த்துவருகிறேன், அப்போதிலிருந்து தற்போது அவர் நடித்த விஸ்வாசம் வரையில், மிக அழகான வளர்ச்சி” என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News