×

ஜெயம் ரவியின் பூமி ஓடிடி ரிலிஸுக்கு ரெடி… வளைத்துப் போட்ட முன்னணி நிறுவனம்!

ஜெயம் ரவியின் 25 ஆவது படமான பூமி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

ஜெயம் ரவியின் 25 ஆவது படமான பூமி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கத்தில் உருவாகி வரும் படம்பூமி’. விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் விவசாயம் செய்யும் ஹீரோவாகவே நடித்துள்ளார் ஜெயம் ரவி. லஷ்மண் இயக்கத்தில் ஏறகனவே ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களில் நடித்த ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளார்.

ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படம் லாக்டவுன் காரணமாக ரிலிஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வரை  தியேட்டர்கள் திறப்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்பதால், ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் முடிந்த நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. விரைவில் ரிலிஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக தீபாவளி அன்று இந்த படம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News