Categories: Cinema News latest news

அட பாக்கவே பயங்கரமா இருக்கே… 1000 கோடி கன்பர்மா? லீக்கான கூலி படக்காட்சி!..

Coolie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி இருக்கும் நிலையில், அது ரசிகர்களிடம் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினியின் படங்களில் மல்டி ஸ்டார் கூட்டணி பின்பற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அஜித்தும் அரவிந்த்சாமியும் இந்த விஷயத்தில் ஸ்டிரிக்டா இருக்காங்க! ஃபாலோ பண்ணுங்கப்பா

அந்த வகையில் அவரின் அடுத்த திரைப்படத்தின் வேட்டையனிலும் ராணா டகுபதி, ஃபகத் பாசில், அமிதாப் பச்சன் நடித்துள்ளனர். இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இப்படம் அறிவிக்கப்பட்ட பின்னர் படத்தில் நாகர்ஜுனா, பிரபல நடிகர் செளபின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக போஸ்டர்களுடன் அறிவிப்பு வெளியானது. இதனால் இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதெல்லாம் அடக்குமுறை இல்ல… பிரியங்காவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…

லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களைப் போல இல்லாமல் வித்தியாசமான கதையாக அமைய இருக்கும் கூலி திரைப்படம் கண்டிப்பாக 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் குவிக்கும் என தற்போது பேச்சுக்கள் எழுந்து வருகிறது.  விரைவில் படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

லீக்கான சீனை காண: https://x.com/pakkatelugunewz/status/1836362784348737582

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily