Categories: Cinema News latest news

கங்கனாவை காலி செய்த அண்ணாச்சி….வசூலில் மாஸ் காட்டிய லெஜண்ட்…

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் ஹீரோவாக நடித்து உருவான லெஜெண்ட் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என 5 மொழிகளில் வெளியானது. மிகவும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக அண்ணாச்சி சரவணன் ஆந்தி,கேரளா,கர்நாடகா என பறந்து சென்று புரமோஷன் செய்தார்.

அண்ணாச்சியை கலாய்ப்பதற்கு என்றே பலரும் படம் பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் சிரிப்பு சப்தம் தியேட்டரில் கேட்கிறது. அதேபோல், அண்ணாச்சியின் உடல் மொழியையும் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

அதேநேரம், 2 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.2 கோடியை வசூல் செய்துள்ளது. இதை திரையுலகினர் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். இப்படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

ஆனால், கங்கனா ரனாவத் நடிப்பில் ரூ.80 கோடி செலவில் உருவான ‘தாகத்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.40-50 லட்சமும், ஒட்டு மொத்தமாகவே ரூ.3 கோடி வரை வசூல் செய்து படுதோல்வி அடைந்து தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா