ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்கியுள்ள ’லெஜெண்ட்’ திரைப்படத்தை அண்ணாச்சி தான் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஓர் பான் இந்தியா திரைப்படம் போல ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இப்படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை தமிழகம் முழுவதும் பிரபல சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியன் வாங்கி வெளியிடுவதாக கூறப்படுகிறது.இதற்கு இடையில் ஒரு பெரிய திரைப்படம் ரிலீசாக உள்ளது என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்துள்ள தி லெஜெண்ட் திரைப்படம் தான்.
படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதே போல படத்தின் டிரைலரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரைலர் வீடியோ அந்தளவுக்கு பிரபலமாகியுள்ளது.
இந்த நிலையில் ரசிகர்களின் ட்ரோலுக்கும் ஆளானார் நம்ம அண்ணாச்சி. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என மரியாதையுடன் கூறினார். மேலும் தற்பொழுது அவர் மனநிலைமை ஒருவேளை இந்த படம் வெற்றி பெற்றால் அடுத்த படத்தில் நடிப்பாராம். தோல்வி அடைந்தால் உடனே அடுத்த படத்தில் நடிப்பாராம். சினிமாவில் வெற்றி பெறுவதை விட வேறெந்த வேலையும் இல்லை என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாச்சி சினிமாவிலும் வெற்றி பெற்றார் என அனைவரும் கொண்டாடவேண்டும் என கூறியுள்ளார். இந்த எண்ணத்தை கண்டு திரை வட்டாரங்கள் அண்ணாச்சியை பாராட்டி வருகின்றனர்.
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…