×

ஹன்சிகாவிற்கு நோ சொன்ன அண்ணாச்சி... ஜோடி பாலிவுட்டில் தான் வேணுமாம்...
 

லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
 
ஹன்சிகாவிற்கு நோ சொன்ன அண்ணாச்சி... ஜோடி பாலிவுட்டில் தான் வேணுமாம்...

வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்து வருகிறது சரவணா ஸ்டோர் குழுமம். சமீபகாலமாக இந்நிறுவனத்தின் விளம்பரங்களில் அதன் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் நடித்து வந்தார். அவருடன் நடிகைகள் தமன்னா, ஹன்சிகா ஜோடியாக நடித்தனர். தொடர்ந்து, சரவணனிற்கு சினிமாவில் கதாநாயகனாகும் ஆசையால் ஒரு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல விளம்பர இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கி வருகின்றனர். படத்தின் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார். 

தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனக்கு நாயகி கோலிவுட்டில் வேண்டாம். பாலிவுட் தான் வேண்டும் எனத் தெரிவித்து இருக்கிறார். இதை தொடர்ந்து, படக்குழுவும் அலசி ஆராய்ந்து நடிகை ஊர்வசி ரவ்துலாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News