ரூ . 2 லட்சம் உதவிய லெஜெண்ட் - கண்ணீருடன் நன்றி கூறிய நடிகர்!
தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மனதில் பிரபலமானவர் தான் நடிகர் பாவா லட்சுமணன். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த மாயி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.
தொடர்ந்து ஆனந்தம், ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்ள பல்வேறு திரைப்படங்களில் பாவா லட்சுமணன் நடித்திருக்கிறார். இதனிடையே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவருடைய கால் கட்டை விரல்கள் அகற்றப்பட்டு மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.

இதனால் அவரது மருத்துவ செலவிற்கு பல நடிகர்கள் நேரில் வந்து உதவி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது லெஜன்ட் சரவணன் அவர்கள் பாவா லட்சுமணன் நிலைமையை அறிந்து அவருக்கு ரூபாய் 2 லட்சம் உதவி செய்து இருக்கிறார் .
இதனை காமெடி நடிகர் கூல் சுரேஷ் பாவா லக்ஷ்மனிடம் கூற உடனே பாவா லட்சுமணன் அவரை நான் பார்த்தது கூட இல்லை. எனக்காக இவ்வளவு பெரிய தொகை உதவியாக கொடுத்திருக்கிறார் என கண்ணீருடன் நன்றி கூறினார்.
