பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

 
பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

இந்திய சினிமாவில் முக்கியமான பின்னணி பாடகிகளில் ஆஷா போஸ்லேவும் ஒருவர். மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியான இவர் இந்திய திரையிசையில் முக்கியமான பாடகளில் ஒருவர். ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் கிட்டதட்ட 12000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். எந்த வகை பாடலாக இருந்தாலும் தனது வசீகர குரலால் பாட்லுக்கு உயிர் கொடுத்துவிடுவார் இவர்.

பாலிவுட் மட்டுமின்றி தமிழிலும் இவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. குறிப்பாக இளையராஜா இசையில் மீரா’ படத்தில் ஓ பட்டர்பிளை , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற செப்டம்பர் மாதம் மற்றும் ஜீன்ஸ் படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே, வித்யாசாகர் இசையில் சந்திரமுகி படத்தில் வரும் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ஆகிய பாடல்கள் இன்றுவரை பிரபலமான பாடல்கள் ஆகும். தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் உல்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் இவர்.

92 வயதான ஆஷா போஸ்லேவுக்கு கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக லேசான உடல்நலக் குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு மற்றும் கடுமையான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதி செய்துள்ளார்.

From Around the web