வருங்கால முதல்வர்; அடுத்த காமராஜர் - லெஜெண்டை குஷிப்படுத்திய ரசிகர்கள்
தமிழகத்தின் பிரபல தொழிலபதிபர் லெஜெண்ட் சரவணா. ஆரம்பத்தில் தனது நிறு வனத்தின் விளம்பரங்களில் நடித்து வந்த அவர், தி லெஜெண்ட் மூலம் நடிகராகவும் அறிமுகம் ஆனார். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் அடுத்த படத்திற்கு கவனம் செலுத்தினார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லீடர் நல்ல வெற்றியை பெற்றதுடன் வசூலையும் பெற்றது. முதல் படத்திலிருந்து முற்றிலும் மாற்றுபட்டு அசத்தலான நடிப்பை வழங்கினார். லெஜண்ட் சரவணன்.
சமீபகாலமாக லெஜெண்ட் சரவணா பலருக்கு உதவிகள் செய்து வருகிறார். பாவா லட்சுமணன் உள்ளிட்ட பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். இது பலராலும் பாரட்டப்படுகிறது. இந்த நிலையில் சரவணாவை அவரது ரசிகரகள் நேரில் சந்தித்தனர். அவருக்கு மாலை அணிவித்து வருங்கால முதல்வர் வாழ்க என்றும் அடுத்த காமராஜர் வாழ்க என்றும் கோஷமிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் லெஜெண்ட் சரவணாவின் அடுத்து பிளான் அரசியல்தான் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.