×

சிவகார்த்திகேயனின் 15 கோடியை திரும்ப கேட்கும் லைகா – எல்லா ஹீரோக்களுக்கும் செக்!

தமிழ் சினிமாவில் கோலோச்சும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் லைகா இப்போது எல்லா ஹீரோக்களிடம் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை கேட்பதாக சொல்லப்படுகிறது.
 

தமிழ் சினிமாவில் கோலோச்சும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் லைகா இப்போது எல்லா ஹீரோக்களிடம் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை கேட்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் இரு கார்ப்பரேட் நிறுவனங்களாக சன் பிக்சர்ஸும், லைகாவும் உள்ளன. மாஸ் ஹீரோக்களின் படங்களை இந்த இரு நிறுவனங்களே மாறி மாறி தயாரித்து வருகின்றன. அஜித்தைத் தவிர மற்ற எல்லா ஹீரோக்களும் இந்த நிறுவனங்களிடம் இருந்து அட்வான்ஸ் தொகை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா நெருக்கடியால் இப்போது லைகா நிறுவனம் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்பதாக சொல்லப்படுகிறது. இதில் முதலில் சிக்கி இருப்பது சிவகார்த்திகேயந்தான். அவரிடம் லைகா நிறுவனம் 15 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளது. அதனால் உடனடியாக தங்களுக்கு படம் பண்ணித்தர வேண்டும் அல்லது அட்வான்ஸ் தொகையைத் திரும்ப தரவேண்டும் எனக் கூறியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News