Categories: Cinema News latest news

ரஜினி போட்ட போன் கால் பார்த்த வேலை தானா இது?.. லியோ ரிலீசுக்கு இன்னும் என்னவெல்லாம் சிக்கல் வருமோ?.

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே என்பதுபோல ஒரு பக்கம் விஜயின் லியோ பட ரிலீஸில் எந்த ஒரு அரசியலும் இல்லை எனச் சொல்லி தயாரிப்பு நிறுவனம் கேட்டதும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

அந்த அறிவிப்பில் தளபதி விஜய் என்பதை பார்த்து ரசிகர்கள் அங்கலாய்த்து நிலையில், விஜய ரசிகர்கள் சும்மா இல்லாமல் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கே காலைக்காட்சி இல்லை இங்க தளபதி கெத்தா பாத்தீங்களா என பில்டப் கொடுக்க தற்போது உள்ளதும் போச்சு நொல்ல கண்ணா என்பது போல லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தான் ஆரம்பிக்க வேண்டும் என்கிற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேறொரு நல்ல ஆர்ட்டிஸ்ட போட வேண்டியதுதானே? சரத்குமாரால் கடுப்பான அந்த டாப் நடிகை

காலை 4 மணி மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், 4 மணிக்கா, 7 மணிக்கு கூட இல்லை ஓடுங்கடா என விரட்டி அடித்துள்ளனர். இதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்த் தான் என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு அவர் போன் போட்டு எகிறிய நிலையில், தான் தற்போது லியோ படத்துக்கு 7 மணி காட்சிக்கு கூட அனுமதி இல்லை என பிஸ்மி பேசியதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு அவசர அவசரமாக லால் சலாம் படத்தின் உரிமையை கொடுத்ததற்கு பின்னணியிலும் லியோ படத்துக்கு ரஜினிகாந்த் செக் வைக்க ஏகப்பட்ட சூழ்ச்சிகள் நடப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: எதை பார்த்தாலும் எச்சில் ஊறுதே!.. பூஜா ஹெக்டேவுக்கு பொறந்தநாள்.. பக்கா ட்ரீட் இதோ!..

இன்னும் லியோ படம் ரிலீஸ் ஆவதற்குள் எத்தனை கதைகளை விஜய் ரசிகர்கள் உருட்டுவார்கள் என்று தான் தெரியவில்லை என பலரும் கலாய்த்து வருகின்றனர். நீங்க கீப் காமா இருந்தாலே படம் பிரச்சனை இல்லாமல் வெளியாகும் என லாயலான விஜய் ரசிகர்களே சக ரசிகர்களை திட்டி வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M