Connect with us

Cinema News

சின்ன யு.. பெரிய ஏ!.. லியோ படத்தோட தரமான சம்பவம்!.. அந்த அப்டேட் கிங் சொன்ன செம மேட்டர்!..

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. ஒட்டுமொத்த திரையுலகமும் லியோ படம் எந்தளவுக்கு மிரட்டப் போகிறது என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறது.

லியோ படத்தில் ஏகப்பட்ட ரத்தமும், ஆயுதங்களும், புகையிலை பொருட்களும், ஆபாச வசனங்களும் அப்படியே ராவான ஆக்‌ஷன் படமாக இருக்கும் நிலையில், ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: அந்த இடத்தில் டாட்டூ குத்திய அனன்யா!.. காட்ட சொல்லி வற்புறுத்திய விசித்ரா.. இதெல்லாம் ரொம்பு தப்பு!..

ஆனால், கடைசி நேரத்தில் சில காட்சிகளை கட் செய்தோ, அல்லது மியூட் செய்தோ யு/ஏ சான்றிதழ் பெற்று விட்டனர். இந்நிலையில், அதிலும் ஒரு செம ட்விஸ்ட் இருக்கு என லியோ படத்தின் அப்டேட் கிங்கான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது வெறித்தனமான விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜுக்கும் விஜய்க்கும் பிரச்சனை என்றும் லியோ படத்தின் எந்தவொரு அறிவிப்பிலும் விஜய்யை டேக் செய்யாமல் இருக்கிறார் என ஒரு சர்ச்சை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: எந்த வகையிலும் பிரயோஜனம் இல்லாத படம்தான் ‘லியோ’! விஜய்க்கு எதிரா அலப்பறையைக் கூட்டும் பிரபலம்

இன்னொரு பக்கம் நடிகை த்ரிஷா லியோ படத்தை டீலில் விட்டு விட்டு அஜித்துடன் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகி விட்டார். எந்த சண்டை எப்படி இருந்தாலும், லியோ படம் வெளியாகப் போவதும் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்திருப்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், ரத்னகுமார் போட்ட ட்வீட்டில் சின்ன u மற்றும் பெரிய A போட்டு யு/ஏ சான்றிதழ் படத்துக்கு கொடுத்தாலும், யு குறைவு தான் என்றும் ஏ தான் அதிகம் என ராவான ஆக்‌ஷன் படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பத்த வச்சு ஃபயரை கிளப்பி பவர் கிக் ஆகி உள்ளார் ரத்னகுமார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top