Connect with us

Cinema News

நீங்க கதறுங்க.. ஒரு வார பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் இவ்வளவா..! அடங்கிய நெகட்டிவ் விமர்சனங்கள்..!

Leo industry hit: விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்துக்கு முதல் நாளில் இருந்து ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வந்தது. இதனால் முதல் நாளில் மட்டும் தான் நல்ல வசூல் மற்ற நாட்களில் வசூல் பெரிதாக அடிப்பட்டதாக கூறப்பட்டது.

லோகேஷ் கனகராஜின் ஹிட் வரிசையில் லியோ பெரிய இடத்தினை பிடிக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் படம் சரியில்லை. இரண்டாம் பாதி ஓட்டவே இல்லை என தொடர்ச்சியாக பலரும் கலாய்த்து வந்தனர். 

இதையும் படிங்க: அடுத்த சம்பவத்துக்கு ரெடி… தளபதி69 படத்தினை இயக்க இருப்பது இந்த இயக்குனர் தானா..!

ஜெயிலர் வசூலை முதல் நாளில் தான் லியோ க்ராஸ் செய்தது. அடுத்தடுத்த நாளில் லியோ படத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி தொடர்ந்து பல விமர்சகர்கள் பதிவிட்டு வந்தனர். இதனால் படம் சரியில்லை என காமன் ரசிகர்களின் எண்ணமாக கூட மாறியது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் 7 நாட்களில் தமிழ் சினிமா வரலாற்றில் 461 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இதையடுத்து லோகேஷ் மற்றும் த்ரிஷா இந்த ட்வீட்டை ஷேர் செய்து இருக்கின்றனர்.

இதனால் #EppudraIrukka என்ற ஹேஸ்டேக்கை எக்ஸில் ட்ரெண்ட்டாக்கி விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இதை ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ச்சியாக நெகட்டிவாகவே பேசி வருகின்றனர். 

இதையும் படிங்க: நம்பிய நடிகர்கள் கைவிட்டும் கடவுள் போல் காப்பாற்றிய கேப்டன் – விவேக்கிற்கு இப்படியெல்லாம் நடந்துச்சா?

தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்வீட்: https://twitter.com/7screenstudio/status/1717526495965417545
author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top