Categories: Cinema News latest news

‘லியோ’வில் நடிக்கும் ‘கைதி’யின் முக்கியமான கதாபாத்திரம்!.. அப்போ லோகி யுனிவெர்ஸ் கன்ஃபார்ம்தான்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகிக் கொண்டு வருகிறது விஜய் நடிக்கும் லியோ திரைப்படம். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாலிவுட் நடிகரான சஞ்சய்தத், அர்ஜுன் , மன்சூர் அலிகான் போன்றவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்ற வருகின்றது. பொதுவாக லோகேஷ் படம் என்றாலே முன்பு அவர் எடுத்த படங்களின் தொடர்ச்சி மற்ற படங்களில் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதாவது லோகி யுனிவர்ஸ் என்று அதை அழைக்கிறார்கள்.

கடைசியாக வெளியான விக்ரம் படத்தில் கூட கைதி படத்தின் பல கதாபாத்திரங்களை அந்தப் படத்தில் காட்டியிருப்பார் லோகேஷ் கனகராஜ். அதேபோல லியோ படமும் லோகி யுனிவர்சுக்குள் வருமா வராதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்திருந்தது.

அந்த சந்தேகம் இப்பொழுது தீர்ந்துள்ளது. அதாவது கைதி படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் சார்ஜ் மரியான் லியோ படத்திலும் நடிக்கிறாராம். அதுவும் அதே போலீஸ் கான்ஸ்டபிளாகத்தான் வருகிறாராம். இதிலிருந்து லியோ படமும் லோகி யுனிவர்சிற்குள் வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க : விஜய் செய்ய தவறியது!.. துணிந்து செஞ்ச அஜித்!.. தனி ஆளா நின்னு சாதிச்ச தல..

Published by
Rohini