Categories: Cinema News latest news

லியோ படம் சுறா2 தான்… மாட்டு சந்தை மாதிரி இத்தன பேரையா எறக்குவானுங்க… இப்படியா டக்குனு சொல்லுவீங்க!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படம் பலதரப்பினரின் எதிர்பார்ப்பையும் உண்மையாக்கும் படி வெற்றி படமாக அமைந்து விட்டது. இதை தொடர்ந்து தற்போது எல்லாருடைய பார்வையும் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் லியோ படத்தின் மீது திரும்பி இருக்கிறது.

இதில் கண்டிப்பாக லியோ ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆனால் அவர்களை வெறுப்பேற்றும்படி சிலர் தொடர்ச்சியாக லியோ படத்தின் மீது எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவராக ரஜினியின் ஆதரவாளரும், விமர்சகருமான சத்யன் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : விஜயகாந்தோடு நடிக்க மாட்டேன்!. கறாரா சொன்ன ரஜினி!.. கேப்டன் கொடுத்த பதிலடி…

அந்த பேட்டியில் இருந்து, விஜய் ரசிகர்கள் அஜித் பேன்ஸ் மாதிரி கிடையாது. ஒரு படம் ப்ளாப் ஆனால் கூட அந்த இயக்குனரை வெளுத்து எடுத்து விடுவார்கள். அவர்களுக்கு அது இன்செக்குரிட்டி தான். எப்பையுமே மேலாகவே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். விஜய் ரசிகர்கள் நெல்சனை படுத்திய பாடு. இந்தியாவில் எந்த நடிகர்களை இயக்கிய இயக்குனர்களுக்குமே நடந்து இருக்காது. அத்தனை அசிங்கப்படுத்தினார்கள். விஜய் தோத்துட்டா? பதுங்கிவிடுவார்கள். அவ்ருடன் இருக்கவே மாட்டார்கள். 

அப்படி தான் தற்போது லியோ படத்திலும் நடக்க இருக்கிறது. இந்த படம் சுறா இரண்டாம் பாகம் போல தான் அமையும். படம் ரிலீசே ஆகல. அதுக்குள்ள 450 கோடி வியாபாரம் செய்து வைத்து இருக்கின்றனர். அப்போ அந்த படம் 800 கோடி வசூல் செஞ்சா தான ஹிட் அடிக்கும். 600 கோடி வந்தால் கூட அது ப்ளாப் படம் தான?

இதையும் படிங்க : வடிவேலு சரியான ஆளுங்க… குத்தமா சொல்லல… சும்மா சொல்லணும்னு தோணிச்சு… பகீர் கிளப்பிய பயில்வான்

இவரின் இந்த வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் சரமாரியாக அவரை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். ரஜினியின் பெயரினை கெடுப்பதே இதைப்போன்ற ஆட்கள் தான் என்றும், ரஜினி கண்டிக்க வேண்டும் எனவும் கமெண்ட்களை தட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவைக்காண: https://www.youtube.com/shorts/_DU3aZ2woXM

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily