Connect with us

Cinema News

லியோ படத்தை தூக்கிட்டு எம்ஜிஆர் படத்தை திடீரென மாற்றிய உட்லண்ட்ஸ் தியேட்டர்.. சென்னையிலயே பாவம்!..

நடிகர் விஜய் நடித்த லியோ படம் 2வது வாரத்திலேயே பல தியேட்டர்களில் காத்து வாங்கி வருவதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடிகர் விஜய்க்கு எதிராக நெகட்டிவிட்டியை பரப்பி பொளந்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள பிரபல உட்லாண்ட்ஸ் திரையரங்கில் நேற்று முதல் விஜய்யின் லியோ படத்தை தூக்கிவிட்டு எம்ஜிஆர் நடித்த எவர்கீர்ன் ஹிட் ரிக்‌ஷாக்காரன் படத்தை போட்டு விட்டதாக சத்யன் ராமசாமி, மனோபாலா விஜயன் உள்ளிட்ட பலர் அந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிக்கெட் புக்கிங் நிலவரத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களை விடாமல் வம்பிழுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 12 தோல்வி படங்கள்!.. ஒரு ஹிட் படம் மூலம் செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய கார்த்திக்…

இந்த முறை விஜய் படத்தை அடித்து காலி செய்து விட வேண்டும் என மேலிடத்தில் இருந்து ஹெவியான உத்தரவு வந்திருப்பது தான் ரசிகர்கள் இப்படி தீவிரமாக இறங்கி சண்டை செய்ய காரணம் என்றும் கூறுகின்றனர்.

இந்த போஸ்ட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள விஜய் ரசிகர்கள் லியோ படம் அந்த தியேட்டரில் இன்னமும் ஓடுகிறது. ஆனால், மாலை 6.30 மற்றும் இரவு 10.30 காட்சிக்குத் தான் ரிக்‌ஷாக்காரன் போட்டுள்ளனர் என ஆதாரத்துடன் பதிலடி கொடுக்க ஸ்க்ரீன் ஷாட்களை ஷேர் செய்து வர, இரண்டாம் வாரத்திலேயே லியோ படத்திற்கு கூட்டம் வரவில்லை என்பதால் தான் அந்த இரண்டு ஸ்க்ரீன்களிலும் படத்தை மாற்றி விட்டு புதிய படம் ரிலீஸ் இல்லை என்பதால் எம்ஜிஆர் படத்தை போட்டாவது சம்பாதிக்கலாம் என உட்லாண்ட்ஸ் தியேட்டர் நினைத்து விட்டதே ஐயோ பாவம் என மீண்டும் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: துக்கம் விசாரிக்கப் போன இடத்துல சூரி பார்த்த வேலை! ‘ஏகே63’க்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவம் இருக்கா?

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top