Leo Movie: லியோ படம் இன்று திரைக்கு வந்து இருக்கும் நிலையில் பலதரப்பட்ட விமர்சனங்களும் எழுந்து இருக்கிறது. இதில் ஏற்கனவே ரஜினிகாந்த் ரசிகர்கள் வம்பு செய்து கொண்டு இருக்கும் நிலையில் புது எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் இந்த படத்தினை தயாரித்து இருக்கிறார். அனிருத் இசையமைத்து இருக்கும் படம் பல எதிர்ப்புகளுக்கு இடையே இன்று திரைக்கு வந்து இருக்கிறது.
இதையும் படிங்க: இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?!.. நடிகர்களை மொத்தமா வேஸ்ட் பண்ன லோகேஷ் கனகராஜ்!…
கிட்டத்தட்ட 20000 திரையரங்கில் இந்த படம் ரிலீஸாக இருப்பதாக சமீபத்தில் இதன் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்து இருந்தார். மேலும் இப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சர்ச்சையை மட்டுமே சந்தித்து வந்தது. நேற்று வரை போராடி இன்று ஒரு வழியாக படத்தினை படக்குழு ரிலீஸ் செய்து இருப்பதே பெரிய விஷயம் தான்.
இந்நிலையில் இன்று காலை வெளியான லியோ படம் ஆரம்பம் முதலில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. லோகியின் முதல் தோல்வி படம் லியோ தான் என பலரும் விமர்சனத்தினை தட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட இது அனைத்துமே பெரும்பாலும் ரஜினி ரசிகர்கள் தான் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஹீரோயின் தான் ஆக முடியல..! செட்டில் ஆகிடுவோம் அதான் பெஸ்ட்டு… வாரிசு நடிகையின் சூப்பர் நியூஸ்..!
இந்த கூட்டத்தில் தற்போது அஜித் ரசிகர்கள் எண்ட்ரி கொடுத்து துணிவு படத்தில் அஜித் செய்த மூன் வாக் ஃபேமஸ் ஆனதை அடுத்து விஜயும் காப்பி அடித்ததாக கலவரம் செய்து வருகிறார்கள். சண்டைக்கு ஒரு நியாயம் வேணாமாப்பா என பலரும் அவர்களை கலாய்த்து வருவதையும் பார்க்க முடிகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன்…
Goundamani: கோவையை…
TVK Vijay:…
AK64: ஆதிக்…
Karuppu Movie:…