Lokesh Leo: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் கிட்டத்தட்ட தொடங்கி இருக்கிறது. வசூலை அதிகரிக்க சாத்தியக்கூறுகளை படக்குழு ஆராய்ந்து அதற்கேற்ப புதிய புதிய விஷயங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் அவரின் அடுத்த படமாக உருவாகி இருப்பது தான் லியோ. இப்படத்தில் விஜய், த்ரிஷா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் என வில்லன்கள் பலரகமாக இறக்கி இருக்கிறார் லோகி.
இதையும் படிங்க: லோகேஷ் என்னங்க படம் பண்றாரு!.. எல்லாமே ஸ்டன்ட் மாஸ்டர் தான்!.. ஓப்பனா சொன்ன பிரபலம்!..
எப்போதும் போல இதுவும் ஆக்ஷன் படமாக தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். வெறும் இரண்டு பாடல்களே கொண்ட இப்படத்தில் 35 பிஜிஎம் போடப்பட்டு இருக்கிறதாம். இதனால் இருக்கும் எல்லா கதாபாத்திரங்களுக்குமே மாஸ் எண்ட்ரி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற பிரச்னை நிலவி வந்தது. ஜெய்லர் பட ரிலீஸ் சமயத்தில் ரஜினிகாந்த் சொன்ன கதைக்கே பலர் அப்ளாஸ் தட்டினர். பட வசூல் தற்போது 800 கோடியை நெருங்கி இருக்கிறது. இதனால் லியோ பட வசூலை அதிகரிக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விஜய்யோட கருடன் கதையில் அந்த காமெடி நடிகரா!.. வெற்றிமாறன் என்ன இப்படி பண்ணிட்டாரு!..
இதனால் லோகேஷ் கனகராஜ் மீது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ய ரஜினிகாந்தினை அவர் இயக்க இருக்கும் பட அறிவிப்பை உடனே வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் லலித்குமார் கோரிக்கை வைத்தாராம்.
இதனால் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் உடனடியாக இந்த அறிவிப்பை எந்த பரபரப்பும் இல்லாமல் வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த படத்தின் வசூலை காலி செய்யவே உதவுமா என்ற கேள்வியும் இருக்கும் நிலையில், இது விஜயை கூல் செய்யும் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
விடுதலை 2…
Parasakthi: அமரன்…
STR49: வெற்றிமாறன்…
ஆதிக் ரவிச்சந்திரன்…
Goundamani: கோவையை…