Categories: Cinema News latest news

அடுத்த மாசமே அண்ணாவோட மாசம் தான் போல!.. 1000 கோடிக்கு லம்ப்பா ஸ்கெட்ச் போட்ட விஜய்!..

அடுத்த மாசம் அக்டோபர் மாசம் இல்லை அண்ணன் விஜயோட மாசம் தான் என அவரது அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகள் இப்போதே லியோ ட்ரெண்டிங்கை சமூக வலைதளங்களில் ஆரம்பித்து விட்டனர்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அசால்ட்டாக எட்டும் என்கிற நிலையில் அந்தப் படத்தின் வசூலை முறியடித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக லியோ மாறும் என்றும் விஜய் ரசிகர்கள் பலத்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி, விஜய், அஜித் கிட்ட இல்லாத பணமா!.. மக்கள் கிட்ட இன்னும் எவ்ளோதான் சுரண்டுவீங்க!.. நியாயமா விஷால்?..

கன்னட திரைப்படமான கே ஜி எஃப் 2, தெலுங்கு திரைப்படமான பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் ஆயிரம் கோடி வசூல் வேட்டையை நடத்தி சாதனை படைத்த நிலையில் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அப்படி ஒரு வசூல் சாதனையை ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் நடத்த தவறிய நிலையில் தளபதி விஜய் லியோ படத்தின் மூலமாக சாதித்துக் காட்டுவார் என்றும் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகர் தான் என்பதை நிரூபிப்பார் என்றும் ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்டோபர் 1 முதல் அடுத்த 15 நாட்களுக்கும் பலவிதமான புரமோஷன்களை நடத்தி டிக்கெட் ப்ரீ புக்கிங்கிலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகளை ஹவுஸ்ஃபுல் செய்யும் ஏகப்பட்ட யுக்திகளுடன் தயாரிப்பாளர் லலித்தை தயார் செய்து வருகிறார் தளபதி விஜய் என்கின்றனர்.

இதையும் படிங்க: லியோ செகண்ட் சிங்கிள் வெளியாகுமா?!.. எல்லாமே அவர் கையில்தான் இருக்காம்!.. பரபர அப்டேட்…

இந்த தடவை குறி மிஸ் ஆகாது என்றும் தமிழ்நாடு அரசிடம் அதிகாலை 4 மணி காட்சிக்கெல்லாம் பிரத்யேக பர்மிஷன் வாங்கும் முயற்சிகளிலும் விஜய் தரப்பு ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

Saranya M
Published by
Saranya M