லியோ, தி கோட்' படங்களின் முதல் 2 நாட்களின் வசூலையாவது முறியடித்ததா 'ஜன நாயகன்'?
வசூலில் யார் மாஸ் என்று மற்ற நடிகர்களுடன் போட்டி போடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் தனது முந்தைய படங்களின் சாதனையை முறியடித்து அடுத்த கட்டத்துக்கு சென்றோமா? என்று பார்க்க வேண்டும். அந்த வகையில் 'தளபதி' விஜய் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்களின் முதல் 2 நாட்களின் வசூல் நிலவரப்படி எந்த படம் டாப்புன்னு பார்ப்போம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' படம் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் முதல் 2 நாட்களில் உலக அளவில் ரூ.210.21 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கிய 'தி கிரேட்டஸ்ட ஆஃப் ஆல் டைம்' (தி கோட்) படம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் முதல் 2 நாட்களில் உலக அளவில் ரூ.153.94 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஹெச்.வினோத் இயக்கிய 'ஜன நாயகன்' படம் நேற்று முன் தினம் (ஜூலை 23-ஆம் தேதி) தான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இது கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.112.50 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
