Connect with us
leo anbnedunm

Cinema News

ப்பா.. என்னவொரு ஃபீல் குட் பாட்டு!.. விஜய்யையும் த்ரிஷாவையும் இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு!..

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளான “அன்பெனும் ஆயுதம்” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் இசையில், விஷ்ணு எடவன் வரிகளில் காஷ்மீரின் கொள்ளை அழகுடன் தளபதி விஜய் மற்றும் த்ரிஷாவின் எவர் கிரீன் கெமிஸ்ட்ரியை மீண்டும் கொண்டு வந்து நம் கண் முன்னே விருந்து படைக்க காதுகளில் இதமாக பாடலை கடத்தியுள்ளார் ராக்ஸ்டார் அனிருத்.

லியோ படம் சின்ன யூ பெரிய ஏ படமாக இருக்கும் என ரத்னகுமார் கூறியிருந்த நிலையில், அந்த சின்ன யூ வில் இவ்வளவு அழகான மெலோடியா லோகேஷ் கனகராஜ் எனும் கல்லுக்குள் இப்படி ஒரு ஈரமா? என்ன ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: உன் இடுப்ப மடிப்புல காணாம போனோம்!.. பல ஆங்கிளிலும் காட்டி ரசிக்க வைத்த ரச்சிதா!..

அந்த அளவுக்கு ஒரு டீனேஜ் பையன் ஒரு குட்டி பொண்ணு மனைவி திரிஷா மற்றும் தளபதி விஜய் என அழகான குடும்பத்துடன் போலீஸ் அதிகாரியான கௌதம் மேனன் மற்றும் அவரது மனைவியான பிரியா ஆனந்த் என பாடல் மூலம் நடிகர்களின் அறிமுகத்தையும் எவ்வளவு எளிமையான அழகான குடும்பத்தில் பார்த்திபன் வாழ்ந்து வருகிறார் என்றும் புயலுக்கு முன் அமைதி என்பதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சூப்பர் என்ன ரசிகர்கள் லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்ட்ரோல பாசமலர் பாட்டு.. புடிச்சிட்டேன்.. லியோ ஹாலிவுட் காப்பியில்ல.. ஜெயிலர் பட காப்பி!..

நான் ரெடி தான், பேட் ஆஸ் பாடல்களை விட இந்த பாடல் லியோ படத்திற்கு ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களையும் குழந்தைகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மேஜிக்கை செய்யும் என்றும் செப்டம்பர் 30ம் தேதி இசை வெளியீட்டு விழா நடந்திருந்தால், இந்த பாடலை எல்லாம் லைவ் இசையுடன் அப்போதே கேட்டு ரசித்திருக்கலாமே என ரசிகர்கள் லைட்டா ஃபீல் செய்தாலும், இப்போ வெளியாகி இருக்கும் இந்த பாடலை வைரலாக்க தீயாக வேலை பார்த்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top