இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் எல்சியூவா இல்லையா என்பது தான் கடந்த பல மாதங்களாக ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருந்தது.
விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இருந்தால் தான் லியோ படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை பண்ண முடியும் என்றெல்லாம் கணிப்புகள் வெளியாகின. லியோ படத்தில் கமல் இருக்கிறார், சூர்யா வருகிறார், பகத் ஃபாசில் நடித்துள்ளார் என ஏகப்பட்ட உருட்டுகள் உருட்டப்பட்டன.
இதையும் படிங்க: திருந்தாத ஜென்மங்கள்?.. பெண்களை இழிவா பேசலாமா விஜய்?.. லியோ டிரெய்லருக்கு குவியும் எதிர்ப்பு!..
ஆனால், தற்போது லியோ படத்தின் டிரெய்லர் தெளிவாக இது எல்சியூ படம் இல்லை என்பதை ஆணித் தரமாக சொல்லியிருப்பதாகவே தெரிகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் நெகட்டிவ் ஷேடில் நடித்திருப்பதாக கூறியிருந்தனர். ஆனால், பார்த்திபன் எனும் குடும்பத் தலைவனாகவே விஜய் நடித்துள்ளார்.
லியோ தாஸ் கதாபாத்திரம் ஒருவேளை நெகட்டிவ் ஷேடில் மிரட்டும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: நீங்க இருக்கது பிக்பாஸ்… கொஞ்சம் யோசிச்சு பேசுங்க பாஸ்..! பிரதீப் பெற்றோர் மரணத்தை கொச்சைப்படுத்திய விஜய் வர்மா…
மேலும், ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகவே லியோ தெரிகிறது என டிரெய்லரை பலரும் டீகோட் செய்து வருகின்றனர். தனது குடும்பத்திற்காக நாயகன் விஸ்வரூபம் எடுக்கும் கதை தான் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ்.
அந்த கதையை தழுவி லோகேஷ் கனகராஜ் தனது ஸ்டைலில் கிண்டியுள்ள பிரியாணி தான் லியோ என தெரிகிறது. கிளைமேக்ஸில் ஒருவேளை எல்சியூ கனெக்ட் எதையாவது லோகேஷ் கனகராஜ் செய்திருக்கிறாரா என்பது படம் வெளியானால் தான் தெரியும்.
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…