
Cinema News
மாட்டிக்கினாரு ஒருத்தரு.. அம்பலமான லியோவின் போலி வசூல் கணக்கு!.. கூலி டேக் ஓவர் ஒட்டுமொத்தமே..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 148.5 கோடி வசூலித்து சாதனை படைத்ததாக விளம்பரம் வெளியிட்டு இந்திய திரை உலகை மிரள வைத்தார் தயாரிப்பாளர் லலித் குமார். லியோவை விட நான்காயிரம் திரை அரங்குகளுக்கும் அதிகமாக திரையிடப்பட்ட ஷாருக் கானின் பதான் படம் கூட முதல் நாளில் 104 கோடி மட்டுமே வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
அது எப்படி திமிங்கலம் வெளியிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கைக்கும் வசூலுக்கும் முரண்பாடாக உள்ளதே, என்று எல்லோரும் கேள்வி எழுப்பினர். ஆனாலும் முதலில் சொன்ன வசூல் கணக்கை அடுத்தடுத்த நாட்களிலும் அதிகப்படுத்திய லியோ தயாரிப்பாளர் லலித்குமார், நான்கு நாட்களில் 405 கோடி என்றும் ஏழு நாட்களில் 461 கோடி என்றும் பன்னிரண்டு நாட்களில் 540 கோடி என்றும் ஒட்டுமொத்தமாக 600 கோடி என்றும் விதவிதமாக போஸ்டர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை தங்கள் நாயகனின் சாதனையாக இன்று வரை விஜய் ரசிகர்கள் மற்ற நாயகர்களின் படங்கள் இந்த அளவுக்கு வசூலிக்கவில்லை என்று கேலி செய்து வந்தனர். லியோ படம் தியேட்டரில் ஒட்டு மொத்தமே 160.50 கோடி மட்டுமே வசூலித்ததாக வருமானவரித்துறையிடம் கணக்கு தாக்கல் செய்திருக்கிறார் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார். அப்படி என்றால் 400 கோடி கணக்குகள் எப்படி வந்தது?
என்று கேட்கும் அப்பாவி ரசிகர்களுக்கு லியோ டிஜிட்டல் உரிமத்தை 124 கோடிக்கும், ஆடியோ உரிமையை 24 கோடிக்கு, ஹிந்தி உரிமத்தை 24 கோடிக்கும், தென்னிந்திய சாட்டிலைட் உரிமையை 72 கோடிக்கும் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 404 கோடியே 56 லட்சம் வந்து இருப்பதாகவும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
இதனை மறைத்து தான் லியோ 600 கோடி ரூபாய் வசூல் என்று விளம்பரப்படுத்தி லலித் லியோவுக்கு வெற்றி விழா நடத்தி இருப்பதாக மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இதனை நினைவூட்டும் விதமாக ரஜினியின் கூலி திரைப்படம் நான்கு நாட்களில் 404+ கோடி என்று பதிலடியாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த விவரம் அறிந்த ரஜினி ரசிகர்கள் கூலி 404+ கோடி ஓவர் டேக் ஒட்டு மொத்தமாகவே என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். கூலி படம் உண்மையிலேயே எவ்வளவு வசூல் என்பது அந்த படத்தின் தயாரிப்பாளர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.