×

கதறவன் கதறட்டும்! இங்க பார்றா பெண் சிங்கத்தோட ஆட்டத்தை - வைரலாகும் டப்ஸ் மாஸ் வீடியோ

மாஸ்டர் படத்தின் வாத்தி பாட்டுக்கு ரசிகர்களிடம் புகழ்பெற்ற பேரன், பாட்டி டப்ஸ்மாஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில் நல்ல குத்தாட்ட பாடலாக அமைந்துள்ளது. வரிகள் குறைவாகவும், இசை அதிகமாகாவும் அமைக்கப்பட்டிருக்கும் இப்பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதே நேரம் இப்பாடலை அஜித் ரசிகர்கள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர். இதே அனிருத் எங்க தலை அஜித்துக்கு போட்ட ஆளுமா டோலுமா பாடல் போல வருமா என அப்பாடலை ஒப்பிட்டு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு புகழடைந்த பாட்டியும், பேரனும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டப்ஸ் மாஸ் செய்தும், நடனமாடியும் அசத்தியுள்ளனர். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து ‘ கதறவன் கதறட்டும்! இங்க பார்றா பெண் சிங்கத்தோட ஆட்டத்தை’ எனக் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News