×

இவருக்கு கோவில் கட்டி கும்பிடலாம்... காய்கறி விற்ற இளம் பெண்ணிற்கு பணி ஆணை!

கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் இருந்தே மக்களுக்கு பல உதவிகளை செய்து வருபவர் நடிகர் சோனு சூட். இவர் ஊரடங்கினாள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் கஷ்டப்பட்ட பல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

 

இரு தினங்களுக்கு முன்னர் கூட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி  என்ற இடத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் விவசாயம் செய்வதற்கு பணமில்லாமல் தவித்து வந்துள்ளார். ஏர் உழுவதற்கு வாடகை மாடு வாங்க கூட பணமில்லாததால் தனது இரண்டு மகள்களை உதவியாக கொண்டு நிலத்தில் ஏர் உழுதார். இது நடிகர் சோனு சூட் காதில் விழ  விடிவதற்கு ஒரு புதிய டிராக்டரை வாங்கி அந்த விவசாயிக்கு கொடுத்து விவசாயி குடும்பத்தை இன்பத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் தற்ப்போது  சாஃப்ட்வேர் இன்ஞ்சினியர் வேலை பார்த்த இளம் பெண் ஒருவர் கொரோனாவால் வேலை இழந்து  காய்கறி விற்று வந்துள்ளார். இதனை அறிந்த சோனு சூட் உடனடியாக தனது உதவியாளர் சாரதாவை பார்த்து விசாரித்து பணி ஆணைய வழங்கியுள்ளதாக  ட்வீட் செய்துள்ளார். நடிகர் சோனு சூட் மக்களின் பார்வைக்கு கடவுளாகவே தோன்றி அனைவரது ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News