×

கொரோனாவுக்கு பின்னர் களத்தில் இறங்குவோம் -ஏவிஎம் நிறுவனம் அறிவித்த அதிரடி முடிவு!

கொரோனாவுக்குப் பின் நிலைமை சரியானதும் ஏவிஎம் நிறுவனம் மீண்டும் படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கொரோனாவுக்குப் பின் நிலைமை சரியானதும் ஏவிஎம் நிறுவனம் மீண்டும் படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் தொடங்க பட்ட சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் நிறுவனம். சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இயங்கிவரும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் புராதனமானதாகும்.

ஆனால் சிவாஜி உள்ளிட்ட படங்களுக்குப் பின்னர் ஏனோ சினிமா தயாரிப்பில் இருந்து விலகியது. இந்நிலையில் இன்று அந்நிறுனத்தின் உரிமையாளர் மெய்யப்ப செட்டியாரின் 112 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மகன் ஏவிஎம் சரவணன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கொரோனா ஊரடங்குக்குப் பின் நிலைமை சரியானதும் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது திரை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News