×

பேசாம பாஜகவுல சேர்ந்துருலாமா – இரண்டாம் குத்து இயக்குனரின் மைண்ட் வாய்ஸ்!

இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் படத்துக்குத் தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் படத்துக்குத் தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் வெளியான இரண்டாம் குத்து என்ற படத்தின் போஸ்டர் சர்ச்சைகளைக் கிளப்பியது. அந்த அளவுக்கு ஆபாசத்தின் உச்சமாக இருந்தது. இதைப்பார்த்து திரையுலகினரே அதிர்ச்சியடைந்தனர். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாரதிராஜா இந்த படத்துக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தைத் தடை செய்ய சொல்லி அழுத்தம் அதிகமாகியுள்ளதால் அது குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தை எங்கே தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் இயக்குனர் பாஜகவில் சேர்ந்தால் தடை விதிக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News