×

செம ஹாட்  Movie.. ஐயோ சீட் எட்ஜ் ஹாரர் த்ரில்லர்... புகழும் லிப்ரா!!!

லிப்ட் திரைப்படம் சரியான சீட் எட்ஜ் ஹாரர் த்ரில்லர் மற்றும் கவின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல முழு விருந்துக்கு மீண்டும் மகிழ்ச்சியாகவும் மிகவும் திருப்தியாகவும் இருக்கும் என்பதில் 200% ஏமாற்றம் இல்லை
 
60bf781ecb237

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் கவின்.

விஜய் டிவி தொடர்களில் நடித்த கவின் பின்னர் நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் நடித்து புகழ்பெற்றார். இதேபோல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல போட்டியாளராக கலந்துகொண்ட பிறகு புகழ்பெற்ற கவின்  பின்னர் தளபதி65 பட பூஜையில் கலந்துகொண்டபோது ட்ரெண்ட் ஆனார். 

அப்போதுதான் அந்த படத்தின் ஆரம்ப திரைக்கதை உரையாடலில் அவர் கலந்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சிவாங்கி பாடிய அஸ்குமாரோ பாடலில் தேஜூ அஸ்வினியுடன் கவின் இணைந்து நடித்த தனி ஆல்பம் ஒன்று கவின் ரசிகர்களுக்கு குஷியை தந்தது.  இந்நிலையில் தான் 'லிஃப்ட்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 

அவருடன் அமிர்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஏகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் விநியோகஸ்தர் தரப்பினரான லிப்ரா புரொடக்ஷன்ஸ் தங்கள் சமூக ஊடகத்தில் இப்படத்தை பற்றி செம்ம அப்டேட் ஒன்றை தந்துள்ளனர். அதில்,  “லிப்ட் திரைப்படம் சரியான சீட் எட்ஜ் ஹாரர் த்ரில்லர் மற்றும் கவின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல முழு விருந்துக்கு மீண்டும் மகிழ்ச்சியாகவும் மிகவும் திருப்தியாகவும் இருக்கும் என்பதில் 200% ஏமாற்றம் இல்லை. தியேட்டரில் காணத் தகுந்த திரைப்படம்.

இயக்குநர் வினீத் படத்தை செதுக்கியுள்ளார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். விநியோகஸ்தராக என்னால் காத்திருக்க முடியவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News