Connect with us

Cinema News

படத்தில் நீங்கள் பார்ப்பது என்னுடைய நிஜ கண்ணீர்…. ஜெய்பீம் பட நடிகை உருக்கம்…

கடந்த இரண்டு நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் டிரண்டாகி வரும் ஒரே ஒரு வார்த்தை ஜெய்பீம். ஆம் நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தை பலரும் பாராட்டி தள்ளி வருகிறார்கள். ஒரு படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஜெய்பீம் படம் உள்ளது.

என்னதான் உண்மை சம்பவத்தை படமாக எடுத்திருந்தாலும் அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதில் தான் படத்தின் வெற்றியே உள்ளது. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் அதை சிறப்பாகவே கையாண்டுள்ளார். மேலும் கதாபாத்திர தேர்வு மிகவும் நேர்த்தியாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.

ஜெய்பீம் படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்மை தான் இப்படத்தில் செங்கனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார்.

lijomol jose

lijomol jose

இந்நிலையில் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய லிஜோமோல், “படத்தில் பல காட்சிகளில் கிளிசரின் இல்லாமலேயே எனக்கு அழுகை வந்தது. இப்போது வரை செங்கனி கதாபாத்திரத்தின் பாதிப்பில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை. படப்பிடிப்பின்போது பல காட்சிகளில் இயக்குனர் கட் சொன்ன பிறகும் நான் அழுது கொண்டிருந்தேன்.

இப்போது கூட ஜெய்பீம் படம் பார்க்கும்போது என்னை அறியாமல் நான் அழுது விடுகிறேன். நீங்கள் படத்தில் பார்ப்பது எல்லாம் என்னுடைய நிஜ கண்ணீர் தான்” என இன்னும் செங்கனி கதாபாத்திரத்தின் தாக்கம் சற்றும் குறையாமல் கூறியுள்ளார். அந்த அளவிற்கு இப்படம் அவர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் மற்றும் நடிகர் மணிகண்டன் ஆகிய இருவரது நடிப்பும் பெரியளவில் பாராட்டை பெற்று வருகிறது. உண்மையை கூற வேண்டுமானால் இவர்கள் படத்தில் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். கிளிசரின் இல்லாமல் கண்ணீர் வரும் அளவிற்கு தத்ரூபமாக லிஜோமோல் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top