முன்னணி ஹீரோக்களுக்கு இணையான ஓப்பனிங்: 1 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று எல் ஐ கே சாதனை

 
முன்னணி ஹீரோக்களுக்கு இணையான ஓப்பனிங்: 1 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று எல் ஐ கே சாதனை

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் எல் ஐ கே. லவ் டுடே , டிராகன் மற்றும் ட்யூட் என தொடர்ந்து 3 பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த பிரதீப்பின் நான்காவது படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அனிருத் இசையமைப்பில் வெளியாகி ஏற்கனவே வைரலான இப்படத்தின் பாடல்களும், வித்தியாசமான ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த எதிர்பார்ப்புகளினால் ஆன்லைனில் இப்படத்தின் டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களான புக் மை ஷோ மற்றும் டிஸ்ட்ரிக்ட் ஆப் ஆகியவற்றில் மட்டும் எல் ஐ கே படத்திற்காக இதுவரை சுமார் 1 மில்லியன் (10 லட்சம்) டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

வழக்கமாக தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி போன்றவர்களின் படங்களுக்குத் தான் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் வரவேற்பு இருக்கும். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே தொடர்ந்து 3 வெற்றிகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு, 1 மில்லியன் டிக்கெட்டுகள் புக்கிங் ஆகியிருப்பது கோலிவுட் திரை வர்த்தக வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

From Around the web